முதல் சுற்றில் இலகு வெற்றிபெற்றார் ஷரபோவா!

0
813
french open 2018 Maria Sharapova

(french open 2018 Maria Sharapova news Tamil)

ரோலன்ட்-கர்ரோஸ் என அழைக்கப்படும் முன்னணி டென்னிஸ் தொடரான பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா வெற்றிபற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் மரியா ஷரபோவா, நெதர்லாந்து வீராங்கனை ரிச்சல் ஹொகென்கெம்பை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய ஷரபோவா 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, ஹொகென்கெம்பை வெளியேற்றினார்.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய ஷரபோவா முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய போதிலும், இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஹொகென்கெம் 6-4 என இரண்டாவது செட்டை கைப்பற்றி போட்டியை சமப்படுத்தினார்.

பின்னர் இடம்பெற்ற தீர்மானமிக்க இறுதி செட்டில் ஷரபோவா 6-3 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஷரபோவா இரண்டாவது சுற்றில் குரோடியாவின் டொன்னா வெகிச்சை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>

french open 2018 Maria Sharapova news Tamil