Categories: FranceWORLD

பிரான்ஸில் குழந்தையை காப்பாற்றியவருக்கு கிடைத்த பரிசு!

பாரிஸில் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மாலி நாட்டு அகதி ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். அதற்காக அவரை அழைத்து குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி. France granted citizenship Paris Spider man

மேற்கு ஆஃபிரிக்க நாடான மாலியிலிருந்து பிரான்ஸிற்கு குடிபெயர்ந்தவர் கசாமா. அவர் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார். குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதுடன் கசாமாவுக்கு பாராட்டுகளும் குவிந்தன.

இந்நிலையில், குழந்தையைக் காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளதுடன், அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அங்கு நடந்ததை பற்றி அவர்,

பாரிஸில் வடக்கு பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டார். அங்கு அவர் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் பல்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்டார்.

அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக்கொண்டிருந்தார். குழந்தையை கீழே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவித தயக்கமுமின்றி கசாமா ‘ஸ்பைடர் மேன்’ பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரைப் பிடித்தபடி மேலே ஏறினார். பின்னர் மாடி பல்கனியில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டுக் காப்பாற்றினார்.

இச்சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருந்தனர். இது குறித்து அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**

Tamil

Share
Published by
Tamil
Tags: France granted citizenship Paris Spider manfrance tamil news

Recent Posts

ரபேல் விமான விவகாரம்; பிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்

ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததில் பிரதமருக்கு தொடர்பு இல்லை என்று நிரூபிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை பிரதமரே முன்வந்து அமைத்து தான் குற்றமற்றவர்…

10 mins ago

தஞ்சை அருகே பெரியார் சிலை அவமதிப்பு: திருச்சியில் சேதம்

தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில், கவராப்பட்டுவில் உள்ள பெரியார் சிலைக்கு காலணி மாலை அணிவித்து மீண்டும் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. (periyar statue Contempt)…

23 mins ago

இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை; ஆறுகளில் அபாயம்; பாடசாலைகள் பூட்டு

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள மூன்று மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப்…

40 mins ago

இத்தாலியில் நிர்வாணமாக திருமணம் செய்த காதல் ஜோடி

இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34). இவரது காதலி ஆன்கா ஆர்சன் (29). இவர்கள் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினர். Romantic couple married nude Italy…

40 mins ago

டி.டி.வி. தினகரன் திமுகவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற திட்டம்

தற்போது நடைபெறும் ஆட்சியை கலைத்து விட்டு கட்சியை கைப்பற்ற டி.டி.வி தினகரனும், ஆட்சியை கைப்பற்ற மு.க. ஸ்டாலினும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். (Minister Thangamani alleges…

58 mins ago

விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்

சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சினால் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை விசேட பயிற்சி ஒன்றுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Scotland's police chief special…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.