பிரான்ஸில் குழந்தையை காப்பாற்றியவருக்கு கிடைத்த பரிசு!

0
663
France granted citizenship Paris Spider man

பாரிஸில் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மாலி நாட்டு அகதி ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். அதற்காக அவரை அழைத்து குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி. France granted citizenship Paris Spider man

மேற்கு ஆஃபிரிக்க நாடான மாலியிலிருந்து பிரான்ஸிற்கு குடிபெயர்ந்தவர் கசாமா. அவர் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு பால்கனியில் இருந்து மற்றொரு பால்கனிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார். குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதுடன் கசாமாவுக்கு பாராட்டுகளும் குவிந்தன.

இந்நிலையில், குழந்தையைக் காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோன் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளதுடன், அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அங்கு நடந்ததை பற்றி அவர்,

பாரிஸில் வடக்கு பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டார். அங்கு அவர் கட்டிடத்தின் 4 ஆவது மாடியில் பல்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்டார்.

அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக்கொண்டிருந்தார். குழந்தையை கீழே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவித தயக்கமுமின்றி கசாமா ‘ஸ்பைடர் மேன்’ பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரைப் பிடித்தபடி மேலே ஏறினார். பின்னர் மாடி பல்கனியில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டுக் காப்பாற்றினார்.

இச்சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருந்தனர். இது குறித்து அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**