பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

0
838
chief minister edappadi palanicamy letter prime minister narendra modi

chief minister edappadi palanicamy letter prime minister narendra modi

கல்வி உதவித் தொகையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுக்காக பிரதமர் மோடிக்கு கடிதத்தின் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ஏராளமான தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறியுள்ளார்.

மேலும் உயர் கல்வியில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உயர் கல்வி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து 2018 மார்ச் மாதம் வரை கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு ஆயிரத்து 803 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வழங்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்டார்.கல்வி உதவித்தொகைக்கான பங்கீட்டை 60-க்கு 40 என்ற விகிதத்தில் பிரித்துக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :