பங்களாதேஷுடன் மோதும் ஆப்கானிஸ்தான்!!! : அணி விபரம் வெளியானது!

0
910
Afghanistan squad vs Bangladesh 2018 Dehradun

(Afghanistan squad vs Bangladesh 2018 Dehradun)

பங்களாதேஷ்  அணிக்கெதிராக அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள இருபதுக்கு-20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான அணியில் பெரிதான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. எப்போதும் நியமிக்கப்படும் அணியே பெயரிடப்பட்டுள்ளது. அணியின் தலைவராக அனுபவ வீரர் அஸ்கார் ஸ்டானிக்ஸாய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி தொடர்களில் அணியை சிறந்த முறையில் வழிநடத்திவந்தவர்.

அத்துடன் ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீட் கான், முஜிபூர் ரஹ்மான் மற்றும் மொஹமது நபி ஆகியோரும் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடர் ஜுன் 3,5 மற்றும் 7ம் திகதிகளில் இந்தியாவின் டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரானது இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறும் முதலாவது இருபதுக்கு-20 தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விபரம் :

அஸ்கார் ஸ்டானிக்ஸாய் (தலைவர்), மொஹதமு சேஷாட், நஜிபுல்லா டர்காய், உஸ்மன் கஹானி, நஜிபுல்லா ஷர்டான், சமியுல்லா சென்வாரி, சஹபக், டர்விஸ் ரசூலி, கரீம் ஜனாட், மொஹது நபி, குல்படின் நயிப், ரஷீட் கான், சஹர்பூதீன் அஷ்ரப், முஜிபூர் ரஹ்மான், சபூர் ஷர்டான், அப்டப் அலாம்

<<Tamil News Group websites>>