நாராயணசாமிக்கு ஆச்சரியம் கொடுத்த ஆளுநர் – கிரண் பேடி!

0
559
surprise narayanasamy kiran bedi pondy

surprise narayanasamy kiran bedi pondy

புதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண் பேடி, இன்று காலை மிதிவண்டியில் முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டுக்கு சென்றார்.

அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் இன்று காலை மிதிவண்டியில் பயணம் செய்த கிரண் பேடி, எல்லையம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள நாராயணசாமியின் இல்லத்துக்குச் சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களை பார்வையிட்ட கிரண் பேடி, முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

துணை நிலை ஆளுநர் வந்த செய்தியறிந்த நாராயணசாமி, கீழே இறங்கி வந்தார். அவருக்கு சால்வை போர்த்திய கிரண் பேடி, நாளை தங்களுக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்து கூறுவதற்காக வந்ததாக தெரிவித்தார். பதிலுக்கு நாராயணசாமியும், சால்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

More Tamil News

Tamil News Group websites :