Categories: INDIATop Story

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓ.பி.எஸ் திட்டவட்டம்!

Sterlite plant will permanently closed – Ops project

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.

நேற்று முதல் இணையதள சேவையும் சீரடைந்த நிலையில், 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் 47 பேரையும் அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும், அம்மா ஆட்சியில் கண்டிப்பாக இந்த ஆலை மீண்டும் இயங்காது என்று உறுதியளித்தார். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பாக நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பின்னர் மருத்துவமனையில் இருந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் துணை முதல்வர் அங்கு நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

More Tamil News

Tamil News Group websites :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: Sterlite plant will permanently closed - Ops project

Recent Posts

இறுதி நேரத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நித்தியா

பிக் பாஸ் வீடு விரைவில் தனது சீசன் 2 ஐ முடிவுக்கு கொண்டுவரவுள்ளது. 100வது நாளை நெருங்கிவிட்ட பிக் பாஸ் வீடானது இந்த வாரம் யாஷிகாவை வெளியேற்றியுள்ளது.…

3 mins ago

ஒரு புருஷனோடு பல வருடங்கள் வாழ்பவர்கள் நல்லவர்களா? – வனிதா விஜயகுமார்

சாதாரணமாகவே குடும்பப் பிரச்சனையை வீதிக்கு கொண்டு வருவது வனிதா விஜயகுமாரின் வாடிக்கை. Vanitha Vijayakumar controversial statement விஜயகுமாருக்கும் அவர் மகளுக்கும் நீண்ட காலமாக பிரச்சனை இருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில்…

14 mins ago

ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இருந்தபோது யாரும் பிரச்சினை ஆக்கவில்லை

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த போது அதையெல்லாம் யாரும் ஒரு பிரச்சினையாக ஆக்கவில்லை. (goa cm manohar parikar issue…

18 mins ago

தந்தையின் மரணமே என் வாழ்வை மாற்றியது: விராட் கோலி

சச்சின், தோனிக்குப் பிறகு விளையாட்டுத்துறையில் இந்தியாவின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணிக் கேப்டன் விராட் கோலி.இந்நிலையில் தந்தையின்…

35 mins ago

வேற்றுக்கிரகவாசிகள் உண்மையா? – பூமியை போன்று 2 உலகங்கள் கண்டு பிடிப்பு

கெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டு, 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை பூமியை போல் வேற்றுக்கிரகங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டறிய…

42 mins ago

மிக இளமையான தோற்றத்தில் ரஜினி: லீக்கான காட்சி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் பேட்டை. Petta movie leak Cinema News  சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்…

43 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.