ரோலன்ட்-கர்ரோஸ் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறிய வீனஸ்!

0
539
Roland-Garros 2018 news Tamil

(Roland-Garros 2018 news Tamil)

ரோலன்ட்-கர்ரோஸ் என அழைக்கப்படும் முன்னணி டென்னிஸ் தொடரான பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்காவின் முதற்தர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் படுதொல்வியுடன் வெளியேறியுள்ளார்.

உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான வீனஸ் முதல் சுற்றில், சீனாவின் 91ம் நிலை வீராங்கனை வாங் கியாங்கிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீனஸ், வாங் கியாங்கை எதிர்கொண்டார்.

எனினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணாக்கிய வீனஸ், 2-0 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய வாங் கியாங் 6-4 என முதல் செட்டை இலகுவாக கைப்பற்றி வெற்றிபெற, இரண்டாவது சுற்றில் சற்று தடுமாறினாலும் 7-5 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

வாங் கியாங் இரண்டாவது சுற்றில் குரோட்டியாவின் பெட்ரா மெட்ரிச்சை எதிர்கொள்ளவுள்ளதுடன், வீனஸ் பரிதாபமாக தொடரிலிருந்து வெளியேறினார்.

 

<<Tamil News Group websites>>