முதல் சுற்றில் வெற்றிபெற்றார் டசொன் லஜோவிச்!

0
690
French Open 2018 Dusan Lajovic news Tamil

(French Open 2018 Dusan Lajovic news Tamil)

ரோலன்ட்-கர்ரோஸ் என அழைக்கப்படும் முன்னணி டென்னிஸ் தொடரான பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் சேர்பிய வீரர் டசொன் லஜோவிச் வெற்றிபெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற முதலாவது சுற்றுப்போட்டியில் லஜோவிச், செக்குடியரசின் ஜிரி வெஸிலியை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய லஜோவிச் 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய லஜோவிச் 6-3 என முதல் செட்டையும் இரண்டாவது செட்டை 6-1 எனவும் இலகுவாக கைப்பற்றிய நிலையில், மூன்றாவது செட்டையும் 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>

French Open 2018 Dusan Lajovic news Tamil