ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

0
402
decided permanently close Sterlite plant Tuticorin district

decided permanently close Sterlite plant Tuticorin district

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23ஆம் திகதிகளில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர்  உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்தவர்களை நேற்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சந்திக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயரதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

decided permanently close Sterlite plant Tuticorin district

More Tamil News

Tamil News Group websites :