​முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்!

0
859
diet Plan major political leaders india

diet Plan major political leaders india

வெகுஜன மக்களின் வாழ்வும் அரசியலும், ஒன்றோடு ஒன்று கலந்த விஷயம் என்பதை நாம் உணரத்தொடங்கிய யுகமாக இக்காலகட்டம் இருக்கும் நிலையில், அரசியல்வாதிகளுடைய அரசியல் மட்டுமின்றி அவர்களது உணவு பழக்கம் வழக்கங்கள் எப்படி இருக்கும் என்பது கூட, நம் ஆர்வத்தை தூண்டும் செய்தி தான்.

முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரும்பி உண்ணும் ஒரு நாள் உணவு இதுதான் என்பது நேற்று முதல் எல்லோராளும் பரபரப்பாக பேசப்படுகிற செய்தி. ஜெயலலிதாவின் அன்றாட வாழ்வை பற்றி சிறு தகவல் கசிவதே அரிது என்ற நிலையில், இந்த உணவு பட்டியல் தான், நமக்கு ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்வை பற்றி தெரியவந்த முக்கிய முழு அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். அதிகாலை 4.55 மணிக்கு தொடங்கும் அவரது டயட் பிளான் இரவு 7.15 மணிக்கு முடிகிறது. தாமரை தண்ணீரோடு தொடங்கப்படும் நாள், காலை உணவுக்கு இட்லி, பிரெட், காப்பி, இளநீர் என்றும் , மதிய உணவுக்கு பாஸ்மதி அரிசி சாதம், கிர்னிப்பழம் என்றும் தொடர்ந்து இரவுக்கு இட்லி உப்மா, தோசை மற்றும் பால் என்று முடிகிறது.

இதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதி, உடல் நிலை சீராக இருந்த சமயத்தில் மிக எளிமையான உணவுகளை உட்கொண்டவர் என தெரிகிறது. உடல்நிலைக்கும், வயதுக்கும் ஏற்றார்போல் உணவு முறைகளை அவர் மாற்றக் கூடியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பக் கட்டதில மாமிச உணவுகளை அதிகம் விரும்பி உண்ட கருணாநிதிக்கு, விறால் மீன் மிகவும் பிடிக்குமாம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எளிமையான உண்வுகளுக்கு அவர் மாறிவிட்டார். இட்லி, தோசை, சாம்பார், காய்கறிகள் என வரிசைப்படுத்தப்படும் அவரது டயட் பிளானில் ஆப்பிள் மிக முக்கிய இடத்தை பிடித்தது. ஆனால் தற்போது உடல்நிலை குன்றிய நிலையில் திரவ உணவுகளை மட்டும் அவர் அதிகம் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் ஜிம், யோகா, டயட் என்று தன் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்தும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு பேரிச்சம்பழம் மற்றும் பாதாமுடன் தொடங்குகிறது. மாமிச உணவுகளில், இவர் அதிகம் விரும்பி சாப்பிடுவது மீன் குழம்பு. காலை உணவுக்கு இரண்டு தோசைக்கு மேல் வேறு எதையும் உட்கொள்வதில்லை என்றும் லைட்டான டயட்டை மட்டுமே ஸ்டாலின் என்றைக்கும் பின்பற்றுவார் என சொல்லப்படுகிறது.

மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தினசரி டயட் பிலானில் இருக்கும், அவருக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் முதலிடம் வெண்டைக்காய் மோர் குழம்பு தான். வடமொழியில் ‘bhindi khadi’ என்று சொல்லப்படும் இந்த பண்டத்தை மோடி விரும்பி உண்ணுவாராம். பிறகு காலை உணவுக்கு அவர் அதிக நாட்கள் உண்ணுவது சாதம் மற்றும் துவரம்பருப்பாலான கிச்சடி என்றும் சொல்லப்படுகிறது. அவருக்கு பிடித்த நொருக்குத்தீனி தோக்லா என்ற பிரபல வட நாட்டு டிஷ் மற்றும் கடலை மாவால் ஆன காந்வி ரோல்ஸ் தான். உலக நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப்பயனம் மேற்கொள்ளும் மோடி, அங்கு வழங்கப்படும் உணவுகள் எதுவாக இருந்தாலும் உண்ணக்கூடியவர் என்றும் , அவருக்கென தனி சமயல்காரர் யாரையும் கூட்டிச்செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

அரசியல் ஆளுமைகளில் ஜெயலலிதா முதல் மோடி வரை பெரும்பாலானோர் உலர்ந்த பழங்களை அதிகம் விரும்பி, தங்களது உணவுகளில் சேர்த்துக்கொள்கின்றனர். அரசியல் தலைவர்கள் உண்ணும் விதவிதமான உணவுகளை தொண்டர்களும் சாப்பிடுகிறார்களா? அதேபோல், தொண்டர்கள் உண்ணுவதைத் தான் அரசியல் தலைவர்களும் சாப்பிடுகிரார்களா ? என்ற கேள்வியின் பதில், அரசியல் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்குமான பினைப்பை உணவு பழக்க வழக்கங்கள் தீர்மானிக்குமா என்பதை முடிவுசெய்யும்.

More Tamil News

Tamil News Group websites :