நியூரம்பெர்க் கிண்ண இறுதிப்போட்டியில் ஜொஹன்னா லெர்சொன்!

0
497
nuremberg cup 2018 final news Tamil

(nuremberg cup 2018 final news Tamil)

ஜேர்மனியில் நடைபெற்று வரும் நியூரம்பெர்க் கிண்ண டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சுவீடன் வீராங்கனை ஜொஹன்னா லெர்சொன் தகுதிபெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சுவீடன் வீராங்கனை ஜொஹன்னா லெர்சொன், செக்குடியரசு வீராங்கனை கெதரினா சினியாகோவாவை எதிர்காண்டு விளையாடினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் லெர்சொன் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

போட்டியின் ஆரம்ப செட்டை சினியாகோவா 6-4 என கைப்பற்றி  முன்னிலை வகித்த போதிலும், அடுத்த இரண்டு செட்களிலும் சிறப்பாக ஆடிய லெர்சொன் 6-3 மற்றும் 6-1 என வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

லெர்சொன் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அலிசோன் ரிஸ்கியை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>