Type to search

மே மாதம் ஆரம்பமாகும் படகு போட்டிகள்

Singapore WORLD

மே மாதம் ஆரம்பமாகும் படகு போட்டிகள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(may month start boat game)

இவ்வாண்டு DBS மரினா படகுப் போட்டிகள் மே 26, 27, ஜூன் 2, 3 ஆகிய வாரயிறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கவிருக்கிறது

இந்த போட்டிகள் 7-வது ஆண்டாக நடைபெறுகின்றன. இம்முறை நீரில் மட்டுமில்லாது நிலத்திலும் போட்டிகள் நடைபெறும் என DBS அறிவித்துள்ளது.
கடல் படகுப் போட்டிகள் மரினா பேயில் உள்ள புரோமொண்டரியில் இடம்பெறும்.

எல்லா ஆண்டுகளும் இடம்பெறும் Pop-up urban beach இம்முறை இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக Battle Bay Extreme போட்டிகள் 48,000 சதுர அடி இடத்தில் பல சுவாரசியமான அங்கங்களுடன் நடைபெறும் எனவும் DBS தெரிவித்துள்ளது.

மேலும் , போட்டிகளில் கலந்துகொள்வதற்கான இணையப் பதிவுகள் முடிந்துவிட்டன, ஆனால் விளையாட்டு நடக்கும் இடத்தில் நேரில் சென்று பதிந்துகொள்ளலாம்.
போட்டிகள் நடக்கும் இடத்தில் 400க்கு மேற்பட்ட உணவுக் கடைகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

மற்றும் , விளையாட்டுப் போட்டிகளில் வழங்கப்படும் பரிசுத்தொகையின் மொத்த மதிப்பு 147,000 வெள்ளி. இது அந்த விளையாட்டுக்காக ஆசியாவில் கொடுக்கப்படும் ஆகப் பெரிய பரிசுத் தொகை என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.

tags:-may month start boat game

most related Singapore news

ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!

**Tamil News Groups Websites**


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: