‘பேரின்பம் மலேசியா’ இயக்கத்தின் புதிய தலைவராக ஜெயராமன் தேர்வு..!

0
642
Jayaraman leader Blissful Malaysia movement, malaysia tami news, malaysia, malaysia news, Jayaraman,

{ Jayaraman leader Blissful Malaysia movement }

மலேசியா: பேரின்பம் மலேசியா இயக்கத்தின், புதிய தலைவராக ஜெயராமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கராத்தே மாஸ்டர் டத்தோ பி. அறிவழகன், உதவித் தலைவர்களாக முத்து, மல்லிகா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எஸ். குபேரன் தலைமை செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட வேளையில் துணை செயலாளராக ஜி. கோகிலவாணி, பொருளாளராக தேவராஜூம், துணைப் பொருளாளராக தனபாலன் ஆகியோரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் பிரிவுத் தலைவராக இவான் சந்திரசேகரனும், மகளிர் பிரிவுத் தலைவியாக ஜி. யாமினியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தனது தலைவர் பதவிக்கான தவணைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து யு.தாமோதரன் அப்பொறுப்பைத் தற்காத்துக்கொள்வதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

மேலும், தலைவர் உள்பட அனைத்து பொறுப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் இந்த புதிய நிர்வாகத்தினர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தல் ஸ்ரீ கோம்பாக்கிலுள்ள பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது. சங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் வகையில் தாமோதரன் சங்கத்தின் ஆலோசனை மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தாமோதரன் கூறுகையில், இந்த சங்கத்தின் ஆலோசனை மன்றத்தில் இடம்பெறுவதன் வாயிலாக புதிய நிர்வாகத்திற்கு என்னால் இயன்ற ஆக்ககரமான உதவிகளை வழங்க முடியும். தொடக்கத்தில், மக்கள் சக்தியிலிருந்து விலகி பேரின்பம் மலேசியா இயக்கத்தைத் தொடங்கிய போது பலர் பல்வேறு கேள்விக்கணைகளை தொடுத்தனர். ஆனால், இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு நாங்கள் வழங்கிய அளப்பறிய சேவைகளின் வாயிலாக இன்று இந்த இயக்கம் மலேசியா முழுவதும் பிரபலமான இயக்கமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனது தலைமையிலான இயக்கத்திற்கு ஆதரவளித்த அனைத்து தரப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்னுடைய அடுத்த நகர்வாக முழுநேரமாக அரசியலில் ஈடுபட உள்ளேன். இது குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தாமோதரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Jayaraman leader Blissful Malaysia movement

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி!

*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..!

*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!

*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது! கேவியஸ் அறிவிப்பு!

*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்!

*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்!

*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!

*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

<< RELATED MALAYSIA NEWS>>