Categories: INDIA

வங்கியில் கணக்காளருக்கே தெரியாமல் நடந்த பணப்பரிவர்த்தனை!

bank account banker without knowing bank

கோவை நீலாம்பூரில் உள்ள கனரா வங்கியின் கிளையில், அந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினர், கணக்கு வைத்துள்ளனர். இந்த கணக்குகளில், திடீர் திடீரென லட்சக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாகவும், 2 தினங்களில் அந்த பணம் திரும்ப எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், வரவு வைக்கப்பட்ட பணத்திற்கு. வட்டி என்ற பெயரில், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் பணத்தையும் வங்கி நிர்வாகம் எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில், தங்களது கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகவும், இரு தினங்களில் வட்டியுடன் சேர்த்து, வங்கி நிர்வாகத்தினர் கூடுதலாக பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், மழுப்பலாக பதில் அளிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் கடன் பெற்ற பயனாளிகள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது, தொடர்பாக விளக்கம்கேட்டு கடந்த 10ம் தேதி வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதியபோதிலும் இதுவரை இந்த பதிலும் இல்லை என்றும் இது தொடர்பாக ஆர்.பி.ஐ, சி.பி.ஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

இது குறித்து ஒரு ஊடக நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்த கோவை கனரா வங்கியின் மண்டல மேலாளர் கணேஷ் ,வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் பணப்பரிவர்த்தனை செய்தது, வங்கியின் தவறுதான் எனவும் அவர்களிடம் பிடித்தம் செய்த வட்டித்தொகையக் திரும்ப வழங்கப்படும், என்றும் கூறினார். வங்கி மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: bank account banker without knowing bank

Recent Posts

தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில் வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட…

8 mins ago

ஒடிசாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்

ஒடிசாவை தாக்கிய புயலால் 08 மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கன மழையால் எங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. (Cyclone Daye storm IMD Rain Warning two days…

19 mins ago

விசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்!

உலகிலேயே விசித்திரமான நண்பர்களுடன் வாழ்கிறார் ஒரு பிரான்ஸ்காரர். பிரான்ஸ் நாட்டின் லூரே நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பிலிப் கில்லட் என்ற 67 வயதுக்காரர் விலங்குகளின் காதலர்.…

33 mins ago

ஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா…

40 mins ago

வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!

வவுனியாவில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதியில் இருவேறு…

41 mins ago

நடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு

காவ்யா மாதவன் 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். Kavya Madhavan Baby shower pictures திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவருக்கு, நடிகை…

42 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.