Categories: NEWSWeather

மழை தொடரும் : களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைகிறது

(bad weather continue)
மழை காலநிலையுடன் வெள்ள நீர் நிலைமை அபாயம் நிலவிய களனி, களு, கிங், நில்வளா கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓய, மகா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், கடந்த 9 மணித்தியாலங்களில் நீரேந்தும் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் மாலா அலவத்துகொட தெரிவித்துள்ளார்.

அத்தனகலு ஓயவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், நீர்கொழும்பு, கட்டான, ஜாஎல மற்றும் கம்பஹா முதலான பகுதிகளில் தாழ்நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

20 மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 50 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

3 ஆயிரத்து 841 வீடுகள் பகுதி அளவிலும், 64 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

13 ஆயிரத்து 199 குடும்பங்களை சேர்ந்த 53 ஆயிரத்து 616 பேர் 231 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி முதலான ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிய ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதன் சிரேஷ்ட ஆய்வாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு கடும் மழையை எதிர்ப்பார்க்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Santhosh M

Share
Published by
Santhosh M
Tags: bad weather continue

Recent Posts

துருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Arjun Reddy Varma Trailer Release இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துரூவ்…

10 mins ago

மைத்திரி, கோத்தா கொலைச் சதி – 2 LMG துப்பாக்கிகள் மீட்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை குறித்து விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

2 hours ago

இலங்கையில் புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

இலங்கையில் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய சொகுசு ரயில் சேவை நேற்று ஆரம்பமாகி உள்ளது. New luxury train service Sri Lanka இந்த ரயில் சேவை…

3 hours ago

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்

அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியமானதாகவே காணப்படுகின்றதென அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார். country needs terrorism law அதேபோன்று புதிய பயங்கரவாத தடைச்சட்டம்…

4 hours ago

காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

மின்னேரியா, கிரித்தலே வாவியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். missing father daughter…

4 hours ago

கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர்…

5 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.