Categories: NEWS

வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி

(Virus infection increased Warning people 14 killed)
ஹம்பாந்தோட்டையில் வைரஸ் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தங்கல்ல, வலஸ்முல்ல மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய இடங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தென்மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்பள்ளிகளும் சில ஆரம்ப பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

உடுகம, மொவக்க, காலி, மாத்தறை, முலட்டியான, அக்குரஸ்ஸ, தங்கல்ல, வலஸ்முல்ல ஆகிய எட்டு கல்வி வலையங்களின் ஆரம்ப பாடசாலைகளே இதனால் மூடப்பட்டுள்ளன.

இந்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்று மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் காரணமாக இதுவரையில் தென்மாகாணத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், 400 பேர் வரையில் நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி, கராப்பிடிய போதனா வைத்தியசாலை, மாத்தறை, எல்பிடிய, கம்புறுப்பிடிய, தங்காலை, வலஸ்முல்ல ஆகிய வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள சிறுவர்கள் நிவ்மோனியா நோயினாலும் முச்சுத் திணறலினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவிற்கு அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வைரஸ் காய்ச்சலினால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்களான இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன்பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் ஆகியோருக்கு தற்காப்பு முறைகளைக் கையாளவும், பொது இடங்களில் மூக்கு, வாய் என்பவற்றை மூடும் வகையிலான பாதுகாப்பு அணிகலன்களை அணிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

காய்ச்சல், தலைவலி, மூக்குத் திணறல், சளி போன்ற நோய்களின் அறிகுறிகள் காணப்பட்டால், முன்பள்ளி மற்றும் தனியார் வகுப்புகளுக்கோ சிறுவர்களை அனுப்ப வேண்டாம் என சுகாதார சேவைகள் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Virus infection increased Warning people 14 killed

Thushi T

Share
Published by
Thushi T
Tags: 14 killedHealth Services BureauToday Tamil News in SriLankaVirus infection increasedWarning people

Recent Posts

எந்த படமானாலும் நான் நடிப்பேன் என கூறும் தாராளமான சாந்த நடிகை!

இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிப்பவர் நடிகை சாந்தினியாம். இவர் சம்பளம் பற்றி அதிகம் பேசுவதில்லையாம், கொடுப்பதை வாங்கிக் கொள்வாராம். அத்துடன் இவர் கதை கேட்காமல், எந்த…

3 hours ago

பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் படிப்படியாக வெளியில் அனுப்பப்பட்டு தற்போது 6 பேர் வரை இறுதி கட்டத்தில்…

3 hours ago

மரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி

பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் டியேகோ மாரடோனா தலைமையில், டொராடோஸ் டி சினாலோவா அணி முதல் வெற்றியை சந்தித்துள்ளது. மெக்ஸிகோவில் நடைபெறும் கிளப்புகளுக்கு…

11 hours ago

அமளிதுமளியில் முடிவடைந்த கல்முனை மாநகர சபை அமர்வு!

கல்முனை மாநகர சபையின் அமர்வு பெரும் வாதப்பிரதிவாதங்களுடன் இடம்பெற்றதுடன் உறுப்பினர்களின் களேபரத்தால் இடைநடுவில் சபை அமர்வை மேயர் முடிவுறுத்தினார். Kalmunai Municipal Council Assembly Today Tamil News…

11 hours ago

பிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்

பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள மசூதிக்கு வெளியே மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமென்றே காரை மோதச் செய்து தாக்குதலுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. Attacking Muslims near mosque Britain எட்குவயார்…

12 hours ago

நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று…

12 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.