ரசித்து உண்ணக்கூடிய சுவையான கிறீன் சிக்கன் வறுவல்…

0
543
tasty Green Chicken fry

(tasty Green Chicken fry)

குழந்தைகள்  மற்றும்  பெரியவர்களுக்கு  மிகவும்  பிடித்த  உணவான  கிரீன்  சிக்கன்  பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

எலும்பு இல்லாத சிக்கன் – அரை கிலோ
புதினா இலைகள் – இரண்டு கைப்பிடி
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி,
பூண்டு – 15 பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 4,
மிளகு தூள் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
சோள மாவு – இரண்டு ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்க. தேவையான அளவு

செய்முறை:-

வெட்டிய  சிக்கன் துண்டுகளை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக, புதினா, கொத்தமல்லி  இலை, இஞ்சி, பூண்டு  இவை  அனைத்தையும்  கழுவி நன்றாக மிஸ்சியில்  போட்டு  அரைத்து  எடுத்து  தனியாக  வைத்துக்கொள்ளவும்

அரைத்த  விழுதை சிக்கன் துண்டுகள் மேல் போட்டு  அதனுடன் சோள மா,  எலுமிச்சை  சாறு, மிளகு தூள்,  உப்பு  சேர்த்து  நன்றாக  கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் சட்டியை  வைத்து  பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை  ஊற்றி  காய்ந்தவுடன் சிக்கனை சிறிது  சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக பொரித்து எடுக்கவும்.

சிக்கன் நன்றாக வெந்ததும் கடாயில் இருந்து எடுக்கவும்.

இப்பொழுது, எல்லோரும்  விரும்பி எந்த நேரத்திலும்  உண்ண கூடிய சுவையான கிரீன் சிக்கன் பொரியல் தயார்.

tags:-tasty Green Chicken fry
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

உலகில் போட்டித்தன்மை மிக்க பொருளியலை கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் சிங்கப்பூர்