Type to search

வடகொரிய ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு டிரம்ப் வரவேற்பு

USA WORLD

வடகொரிய ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு டிரம்ப் வரவேற்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(tamilnews meeting Kim Jong un US President Donald Trump June)

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

அணுவாயுத சோதனை கூடங்களை அழித்துள்ள வடகொரியா, அந்த சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிம் உடனான ஜூன் 12 ஆம் திகதி சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்தார்.

இந்தநிலையில், கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பை டிரம்ப் இரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசாங்கம் இன்று (25) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வடகொரிய வெளியுறவு துறை அமைச்சர் கிம் கை குவான் கூறுகையில், ‘எங்கள் நாட்டு ஜனாதிபதியுடனான சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மிக வருத்தமளிக்கிறது.

எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளை தீர்க்க நாங்கள் தயார்’ என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘வடகொரியாவின் ஆக்கப்பூர்வமான இந்த அறிவிப்பு நல்ல செய்தியாகவும், இதம் அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்த முடிவு நீண்டகால அமைதி மற்றும் நீடித்த வளமையை பாதுகாக்கும் வகையில் எதுவரை போகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கு காலம்தான் பதில் சொல்லும்’ என குறிப்பிட்டுள்ளார்.

(tamilnews meeting Kim Jong un US President Donald Trump June)

More Tamil News

Tamil News Group websites :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: