நிர்மலா தேவியின் பிணை மனு 3ஆவது முறையாக தள்ளுபடி

0
629
Nirmaladevis Virudhunagar Criminal Court indiatamilnews tamilnews

Nirmaladevi bail application dismissed Srivilliputur Court

பல்கலைக்கழக மாணவிகளை உயரதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலாதேவியின் பிணை மனுவை  தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் 3ஆவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்றமை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சாத்தூர், விருதுநகர் நீதி மன்றங்களில் நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் நீதிமன்றில் நிர்மலா தேவி பிணையில் விடுவிக்கக்கேரி மனுத்தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 18ஆம் திகதி அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றில் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கக்கேரி மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். அப்போதும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி 3ஆவது முறையாக பிணையில் விடுவிக்கக்கேரி ஸ்ரீவில்லிபுத்தூர் நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சிங்கராஜ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்து. நிர்மலா தேவிக்கு பிணை வழங்க அரசு தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நிர்மலாதேவியின பிணை மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரது பிணை மனுவும் இதே நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அவர்களது பிணை மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Nirmaladevi bail application dismissed Srivilliputur Court

More Tamil News

Tamil News Group websites :