Categories: Head LineHot NewsNEWSTop Story

இலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை : நேற்றிரவு அதிர்ச்சி சம்பவம்

(dhananjaya de silva father killed)
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான கே. ரஞ்சன் சில்வா துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

நேற்று (24) இரவு 8.30 மணியளவில் இரத்மலானை பிரதேசத்திலுள்ள ஞானேந்திர வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமுற்ற நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பலியான 62 வயதான கே. ரஞ்சன் சில்வா, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மலர் மொட்டு) கட்சியின், தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இது வரை அறியப்படவில்லை என்பதோடு, கல்கிஸ்ஸை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தை கேள்வியுற்ற, இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான வீரர்கள், தற்போது களுபோவில வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜூன் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 டெஸ்ட் போட்டித் தொடருக்காக நாளைய தினம் (25) மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாக இருந்த இலங்கை கிரிக்கெட் குழாமில் இடம்பெற்றிருந்த 26 வயதான தனஞ்சய டி சில்வா, தற்போது அதிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலது கை துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வா 13 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 ஒரு நாள் மற்றும் 07 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் செல்வதற்கான விமானத்திற்கு 12 மணித்தியாலங்கள் இருந்த நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Santhosh M

Share
Published by
Santhosh M

Recent Posts

அமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’

3 வருடங்கள் பழுதடையாமல் புத்துணர்வுடன் இருக்கும் புதிய பீட்சாவை அமெரிக்க இராணுவத்தின் சமையல் பிரிவு வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். American Army’s culinary experts pizza refreshed 3 years …

13 mins ago

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (demonstration demand 7 people…

2 hours ago

திருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது

காஞ்சிபுரம் வளத்தோட்டம் பகுதியில் திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (clash transgender cut scythe one 17 people…

2 hours ago

முகநூலில் அறிமுகமான புதிய Dating Site..!

முகநூலில் துணையைத் தேடுபவர்களுக்கான புதிய தளத்தை Facebook நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. New dating site introducing facebook கொலம்பியாவில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான முகநூல் உறுப்பினர்களிடையே…

2 hours ago

ஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது!

ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவத்தை அம்பலப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரகேயுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்தியர் ஒருவர் குற்றப்…

3 hours ago

பாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்

பாடசாலை வாகனத்தில் 3 வயது பெண் குழந்தையொன்றை நடத்துனர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (3 year old girl sexually abused…

3 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.