கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை

0
989
tamilnews methsewana 722 housing project open janathipathi premier

(tamilnews methsewana 722 housing project open janathipathi premier)

கொழும்பு மாநகரம் நாட்டின் தலைநகரமாக திகழ்ந்த போதும் அதன் உட்கட்டமைப்பில் முழுமை தன்மை இல்லாததன் காரணமாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் அதனை மறைத்துவிட்டு மேலோட்டமாக மலர் கன்றுகளை நட்டு அழகுபடுத்துவதில் எந்த பயனும் இல்லை என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், ஜனாதிபதியும், பிரதமரும் கொழும்பு வாழ் குடிசைவாசிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வசதிமிக்க வீடுகளை கட்டித்தந்து 100 சதவீதம் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க எண்ணம் கொண்டுள்ளார்கள் என குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டளவில் கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக மேலும் 21,000 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள், மதுபானம் ஆகியவற்றுக்கு அடிமையாளர்கள் மற்றும் துர்நடத்தை உள்ளவர்களுக்கு மக்கள் வாழும் குடியிருப்புகளில் இடமளிக்க கூடாது.

ஹேனமுல்ல பிரதேசத்தில் நேற்று (23) இடம்பெற்ற மெத்சத் செவன திட்டத்தில் 722 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துகளை வௌியிட்டார்.

2014 ஆம் ஆண்டு குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது 210 மில்லியன் ரூபா செலவில் திட்டம் செயற்படுத்தப்பட் போது மிக துரித காலத்தில் அதனை நிறைவு செய்யக் கூடியதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

(tamilnews methsewana 722 housing project open janathipathi premier)

 

More Tamil News

Tamil News Group websites :