Type to search

கல் முள் வீதியில் ஓடும் “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” பட டீம்..!

CINEMA Kollywood

கல் முள் வீதியில் ஓடும் “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” பட டீம்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Kelambitangaya Kelambitangaya Movie Latest Update)

நடிகை இனியாவின் சகோதரியான தாரா, இயக்குநர் ரசாக் இயக்கியுள்ள “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.

அதாவது, ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா”.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்த இப்படத்தில், பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகின்றனர்.

கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய பிரம்மாண்ட இயக்குனர்களுடன், “பவர்ஸ்டார்” சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், தனது முதல்பட அனுபவம் குறித்து தாரா கூறுகையில்.. :-

” ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் தங்கள் கவலைகளை மறந்து மனம்விட்டு சிரிக்கலாம்.

இந்த படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது. போக போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்க தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர் தான்.

மேலும், படத்தின் இறுதிக்காட்சியில் ஹீரோவுடன் நான் ஓடவேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்த காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம்.

அத்துடன், தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும் என என் அக்கா எனக்கு அறிவுரை கூறினார்” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சாமி ஸ்கொயர் படத்தில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் : பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி..? : மனம் திறந்த தீபிகா படுகோனே..!

அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!

அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!

“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!

அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..!

டெட்பூல் 2 : திரை விமர்சனம்..!

Tags :-Kelambitangaya Kelambitangaya Movie Latest Update

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 24-05-2018


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: