Categories: Hot NewsNEWS

இளைஞன் வெட்டி கொலை : முல்லைத்தீவில் பரபரப்பு

(28 old boy killed sword attack mullaitivu selvapuram)
முல்லைத்தீவு செல்வபுரம் பனங்கூடல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதுடைய வரதராஜா சதாநிசன் என்ற இளைஞனை நேற்றையதினம் மாலை வரை காணாத நிலையில் குடும்பத்தார் தேடியுள்ளனர்.

இதேவேளை செல்வபுரம் கள்ளுத்தவறணை பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று மாலை வரை நின்றுள்ளதை அவதானித்த அருகில் உள்ள அயலவர்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

குறித்த சம்பவத்தை ஆராய்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்து சென்று, மோட்டார் சைக்கிளை பார்வையிட்டுள்ளதுடன் அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்தில் வெட்டப்பட்டநிலையில் வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துள்ளார்கள்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து செல்வபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு இன்று காலை சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு உடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து உடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Santhosh M

Share
Published by
Santhosh M
Tags: 28 old boy killed sword attack mullaitivu selvapuram

Recent Posts

இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடுகிறது! 16 பேர் குழுவுக்கும் அழைப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (20) இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன்…

6 mins ago

டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

அமைச்சரவை முடிவுகளை அறிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19), இடம்பெற்றது. Rajitha Senaratne Said Fuel Price Increment Sri Lanka Tamil…

20 mins ago

சின்னத்திரைக்குள் விஷால்

‘இரும்புத்திரை’ படத்துக்கு பின் விஷால் ‘சண்டக்கோழி 2’ மற்றும் வெங்கட் மோகனின் ‘அயோக்யா’ படங்களில் நடித்து வருகிறார். Vishal conducts TV show ‘சண்டக்கோழி 2’ படத்தை அக்டோபர்…

3 hours ago

மும்தாஜுக்கு பாராட்டு விழா

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு பாராட்டு விழா ஒன்று நடக்கவுள்ளது. மும்தாஜ் ஆர்மியினர் அவருக்காக இதனை ஏற்பாடு செய்துள்ளனர். Mumtaz celebration invitation போலி அன்பு…

4 hours ago

நிலானியை தொடர்ந்தும் மிரட்டி வந்த லலித்குமார்…!!

சென்னையில் சீரியல் துணை இயக்குனர் லலித்குமார் என்பவர் தற்கொலை செய்ய நடிகை நிலானியே காரணம் என செய்திகள் பரவியது. அது மட்டுமல்லாது அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த…

4 hours ago

மஹத்தின் முத்தக் காட்சி வெளியானது..!

ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் விருப்பப்படி பிக்பாஸ் வீட்டில் பலருடன் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் நடிகர் மகத். பிக்பாஸ் வீட்டில் பெண்களோடு வலம் வந்தவர் மஹத். பின்னர் அவரின்…

4 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.