பிரான்ஸில் 22 ஆவது நாளாகவும் பாதிப்புக்குள்ளான பயணிகள்!

0
766
22nd day SNCF strike France

இன்று (மே 24) நடக்கின்ற SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 22nd day SNCF strike France

SNCF தொழிலாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 20 நாட்களுக்கு மேலாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று புதன்கிழமையைத் தொடர்ந்து, இன்று 22 ஆவது நாளாக, வியாழக்கிழமையும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

Transilien மற்றும் TER சேவைகளில் 50 வீதமானவை தடைப்பட உள்ளது. இல்-து-பிரான்ஸுக்குள் RER B மற்றும் RER C சேவைகளில் இரண்டில் ஒரு சேவை இயங்கும். RER E சேவைகளில் ஐந்தில் இரண்டு இயங்கும். ஆனால் RER A சேவைகள் வழமை போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடந்த இரு மாதங்களில் பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு 50 மாத விலைக்கழிவுடன் கூடிய நவிகோ அட்டை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**