கடத்தப்பட்ட டச்சு சிறுமியை பற்றி கலந்துரையாடவுள்ள டச்சு பிரதமர்

0
588
Dutch Prime Minister kidnapped Amsterdam girl, Dutch Prime Minister kidnapped Amsterdam, Dutch Prime Minister kidnapped, Dutch Prime Minister, kidnapped Amsterdam girl, Tamil Netherland news, Netherland Tamil news

(Dutch Prime Minister kidnapped Amsterdam girl)

செவ்வாயன்று டச்சு பிரதமர் Mark Rutte இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இவரது இந்த விஜயத்தின் போது, கடத்தப்பட்ட ஆம்ஸ்டர்டம் சிறுமி இன்சியா பற்றி ‘உயர் மட்டத்தில்’ விவாதிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“இந்த வழக்கை நான் மிகவும் அறிந்திருக்கிறேன், இந்தியாவிற்கான எனது விஜயத்தின் போது நான் அதை பற்றி விவாதிப்பேன்” என்று Rutte செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவரது கருத்தின் படி, வெளியுறவு அமைச்சகம் 4 வயதான பெண்ணைப் பற்றி தொடர்ந்து இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறது. “தாய் மற்றும் மகளுக்கு இடையேயான தொடர்பு மீண்டும் நிறுவப்படும் என நான் நம்புகிறேன், அது அனைவருக்கும் சிறந்தது, ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பதை, நான் கூற முடியாது என்றார்.”

கடந்த ஆண்டு இந்திய பிரதம மந்திரி நெதர்லாந்திற்கு விஜயம் செய்தபோது, டச்சு பிரதமர் இந்த விடயத்தை பற்றி கேள்வி எழுப்பினார்.

செப்டம்பர் 2016 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டாமில் அவரது பாட்டி வீட்டில் இருந்த போதே இன்சியா ஹெமனி கடத்தப்பட்டார். கடத்திய குழந்தையை அவரது தந்தை ஷெசாத் ஹெமானி இந்தியாவுக்கு அழைத்துச் சென்று விட்டார். சிறுமியின் தாயார், நதியா ரஷிட், தனது மகளை மீண்டும் பெறக்கூடிய அனைத்து செயல்களையும் செய்து விட்டார்.

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் இன்சியா தனது தாயிடம் திரும்ப வேண்டும் என்று இந்தியாவில் நீதிமன்றம் முன்பு தீர்ப்பளித்த போதும், தந்தை ஹெமனி அதனை தாமதப்படுத்தினார்.

Dutch Prime Minister kidnapped Amsterdam girl, Dutch Prime Minister kidnapped Amsterdam, Dutch Prime Minister kidnapped, Dutch Prime Minister, kidnapped Amsterdam girl, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites