கோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா?

0
598
Chicken Curry Effect Masculinity boys, health tips, tamil health tips, Chicken Curry effected boys, health tips,

{ Chicken Curry Effect Masculinity boys }

இன்றையச்சூழலில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மனிதன் உறங்கும் நேரத்தையே மாற்றிவிட்டன. ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு செயல்திறன் உண்டு.

ஆணைப் பொறுத்தவரை இரவு, நள்ளிரவு, விடியற்காலை நேரங்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில்தான் ஆணின் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படும். ஆனால், இன்றைக்கோ இரவு, நள்ளிரவு வேளைகளில்கூட கம்ப்யூட்டர் பணியில் ஈடுபடுகிறார்கள் ஆண்கள். இதனால் ஓர் ஆண் உணவு உண்ணும் நேரம், உறங்கும் நேரம் எல்லாமே மாறிவிடுகின்றது. இதனால் உடல் இயக்கமும் மாறுகின்றது.

உணவைப் பொறுத்தவரை அசைவ உணவு ஆண்மைக்கு வலு சேர்க்கக்கூடியது. இன்றைக்கோ, கோழிக்கறி சாப்பிடும் ஆண்களுக்கு ஆண் தன்மையே பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

கறிக்கோழிகளின் செல்களை வேகமாக வளர வைக்க, அதன் எடையை அதிகரிக்க ஈஸ்ட்ரோஜென் ஊசி போடுகிறார்கள். ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன்; அந்த ஹார்மோனை ஊசி மூலம் செலுத்தி வளர்ந்த கோழியைச் சாப்பிட்டால் என்னவாகும்.

மேலும், அந்தக் கோழிக்கு முழுமையான பெண்மைத் தன்மையும் கிடையாது. அந்தக் கோழியால் முட்டை போட முடியாது. கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும் அந்தக் கோழியைச் சாப்பிடும் ஆண், பெண் இருவருக்கும் இதனால் பிரச்னையே ஏற்படும்.

பொதுவாக, எந்த உணவு ஊட்டம் அளிக்கும் என்ற புரிதல் இல்லாமலேயே நாம் கண்டதையும் சாப்பிடுகின்றோம். காய்கறிகளில் விதையுள்ள வெண்டை, முருங்கை போன்றவற்றைச் சாப்பிட்டால் வீரியம் கூடும். நாமோ பெரும்பாலும் விதையில்லாத உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றையே அதிகமாகச் சாப்பிடுகின்றோம். இதனால் விந்தணு உற்பத்தியாவதில் சிக்கல் ஏற்படுகின்றது.

நமது தட்பவெப்பநிலைக்கு ஏற்ற உடை வேட்டி. அதை அணிந்தால் காற்றோட்டமான சூழலில் இருக்கலாம். விதைப்பை தளர்ச்சியாக இருக்கும்படியான உள்ளாடைகளை அணிவதே நம் தமிழர் மரபு. ஆனால் இன்றைக்கு, பேன்ட் அணிகின்றோம். காட்டன் பேன்ட் போட்டால்கூட பரவாயில்லை. இடுப்பை இறுக்கும் ஜீன்ஸ் பேன்ட்டுகளையே அதிகம் பயன்படுத்துகின்றோம்.

வேலைச்சூழல் காரணமாக நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பது, ஏ.சி-யில் அமர்வதால் உள் உறுப்புகள் சூடாகிவிடும். இதையெல்லாம் பல மருத்துவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் `டெஸ்டோஸ்டீரான் (Testosterone) குறைந்துவிட்டது’ என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டு சிகிச்சை எடுக்கச் சொல்லிவிடுவார்கள்.

சூரிய ஒளி உடம்பில்பட்டாலே டெஸ்டோஸ்டீரான் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், முழுக்கை சட்டை அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செல்வது, சூரியஒளி புகாத இருட்டறையில் நாள் முழுக்க இருப்பதே பெரும்பாலான ஆண்களின் பழக்கமாகிவிட்டது.

எண்ணெய்க் குளியல் எடுக்காததும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம்தான். அதிகச் சூடுள்ள உடலில் உயிரணுக்கள் நிலைத்து நிற்காது. எண்ணெய்க் குளியல் உடல் சூட்டை சமநிலைப்படுத்தி உயிரணுக்கள் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆண்மைக் கோளாறுகளைச் சரிசெய்ய ஜாதிக்காய், அமுக்கரா சூரணம் போன்ற ஏராளமான மருந்துகள் உள்ளன. ஆனால், சமூக மாற்றம் வராமல் மருந்துகளை மட்டும் சாப்பிட்டுப் பயனில்லை. ஒட்டுமொத்தமாக நம் பாரம்பர்யத்தை மீட்டெடுத்தால்தான் எல்லோரும் நலமாக வாழ முடியும்.

Tags: Chicken Curry Effect Masculinity boys

<< RELATED HEALTH NEWS >>

*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…!

*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…!

*உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை மட்டும் சாப்பிடாதீங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/

http://tamilfood.com/

http:technotamil.com

http://tamilgossip.com/

http:cinemaulagam.com

http://sothidam.com/

http://tamilsportsnews.com/