சீரற்ற காலநிலை ; 11 பேர் பலி; 84943 பேர் பாதிப்பு

0
733
Bad weather 11 killed 84943 people affected

(Bad weather 11 killed 84943 people affected)
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்ததுடன், 12 மாவட்டங்களை சேர்ந்த 84 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பல பிரதேசங்கள் வெள்ளநீர் தொடர்ந்தும் தேங்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் கடற்படையினர் உள்ளிட்ட நிவாரண குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடும் மழையின் காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் தாழ்நிலங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக வடக்கு கிழக்கில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், களனி, களு, கிங் மற்றும் நில்வளா முதலான கங்கைகளிலும், அத்தனகல ஓயாவிலும் தொடர்ந்தும் வெள்ள நிலைமை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவானால், நீர் மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Bad weather 11 killed 84943 people affected