நுவரெலியாவில் 1336 பேர் அனர்த்தங்களால் பாதிப்பு

0
557
1336 people Nuwara Eliya affected disasters

(1336 people Nuwara Eliya affected disasters)
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து முகாம்கள் மற்றும் உறவினர்கள், அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 68 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனர்த்த உதவிகளை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வழங்கி வருகின்றது.

மலையகப் பகுதியில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலான பகுதியில் பாரிய முகில் கூட்டங்கள் காணப்படுவாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பாதை வெடிப்புக்கள், குடியிருப்பு வெடிப்புகள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளதுடன், கடுமையான குளிர் காரணமாக தோட்ட தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன், பயிர் நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதைகளில் பாரிய பனிமூட்டம் காணப்படுவதனால் சாரதிகள் கவனமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் பல இடர் அனர்த்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் தாழ் நில பிரதேசங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது சில நீர் நிலைகளில் மழை நீர் நிரம்பி வருகின்றது. மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்தேக்கங்களின் நீரின் மட்டம் உயர்ந்துள்ளது.

மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவு ஒன்று இன்று காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 1336 people Nuwara Eliya affected disasters