தூத்துக்குடி போராட்டத்தில் பொலிஸ் துப்பாக்கி சூடு.. இதுவரை 5 பேர் பலி

0
829
sterlite protest 5 dead

(sterlite protest 5 dead)

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், துப்பாக்கி சூட்டில் 6க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்வர்களின் பெயர், ஊர் விவரங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

1) குறுக்குசாலை கிராமத்தை சேர்ந்த தமிழரசன் (28) 2) ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகம் (40) 3) மேட்டுப்பட்டியை சேர்ந்த கிளாஸ்டன் (40) 4) தூத்துக்குடியை சேர்ந்த கந்தையா (55) 5) தூத்துக்குடி தாமோதர் நகரை சேர்ந்த மணிராஜ் ஆகியோர் பொலிசாரின் துப்பாக்கி சூட்டால் கொல்லப்பட்டவர்கள்.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தின் வேகம் சற்று குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிசார் திணறியதால் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.

இதையடுத்து நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்து கூடுதல் பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து சூறையாடி, 50க்கும் மேற்பட்ட வாகனங்களை தீக்கிரையாக்கினர்.

அப்போது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். முட்டிக்கு கீழேதான் சுட வேண்டும் என்ற அறிவுறுத்தல் உள்ள நிலையிலும், போராட்டக்காரர்களை சுட்டு கொன்றுள்ளது காவல்துறை. இதனால் தூத்துக்குடி நகரம் முழுக்க, பரபரப்பு நிலவுகிறது.

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு, ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், வேல்முருகன், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மொத்த தூத்துக்குடி நகரமும் பொதுமக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், இப்போது மீண்டும் பொலிஸ் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை