வைரஸினால் சிறுவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது

0
572
Reason death children Karapitiya Teaching Hospital

(Reason death children Karapitiya Teaching Hospital)
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கடந்த சில வாரங்களாக சிறுவர்களின் உயிரிழப்பு அதிகரித்தமைக்கு காரணம், தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் பிரிவு செயலிழந்தமையினாலே என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் முதலாம் இலக்கப் பிரிவுள்ள கட்டில்களில் பல குழந்தைகளை வைத்து, சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்த நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இந்தப் பிரிவில் கட்டட பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமையினால் இந்தப் பிரிவு செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படடுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் பிரிவு அவசியமில்லை என்றும் சில அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சிறுவர்களின் உயிரிழப்புக்கள் 11 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதுகுறித்து வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநரான வைத்தியர் ஜயம்பதி சேனநாயக்கவிடம் வினவிய போது, தனிமைப்படுத்தும் பிரிவு பெரியம்மை மற்றும் சரும நோயாளர்களுக்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கு அவசியமான மருந்து வகைகள் அனைத்தும் வைத்தியசாலையில் உள்ளதாகவும் வீண்வதந்திகளினால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இன்ப்லுவென்சா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 37 சிறுவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவர்களில் 27 குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் நோய் பரவியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சிறுவர்கள் அனைவரும் இரண்டு வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோய் பரவுவதைத் தடுக்கும் முகமாக தென் மாகாணத்திலுள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மூடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நோய் பரவும் பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் முதன்மை (Primary section) பிரிவை இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களிலும் (22 – 23) மூடிவிட அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திமா ராசபுத்ர தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Reason death children Karapitiya Teaching Hospital