இரண்டு வருடங்களில் 2270 வீடுகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு – அமைச்சர் சம்பிக்க

0
432
Minister Patil provide political affairs pressure housing schemes

(Minister Patil provide political affairs pressure housing schemes)

வீடமைப்பு திட்டங்களின் போது உரியவர்களுக்கு வீடுகளை வழங்கும் போது அரசியல் நற்புறவு மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் வழங்கவில்லை என அமைச்சர் பாட்டளி சம்பிக்க தெரிவித்தார்.

பர்ல் சிட்டி உள்ளிட்ட 5 மாதிரி நகரங்களை கொழும்புக்கு புறம்பாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மாநகர சபை மற்றும் மேல் மாகாண சபை அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

கிராமிய வறுமை மற்றும் வீட்டு வசதியின்மை தொடர்பாக பெறும்பாலும் பேசபட்ட போதும் கொழும்பு நகரத்தில் பாரிய பிரச்சினையாகவுள்ள குடிசை வீடுகள் தொடர்பாக வெவ்வேறு அரசாங்கங்கள் ஊடாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

ஆரம்ப காலத்தில் குடிசையில் வாழ்ந்தவர்களுக்காக சர் ஒலிவர் குணதிலக்க இரண்டாம் உலகப் போர் இடம்பெற்ற தருணத்தில் துறைமுக பணியாளர்களுக்காக வீட்டுத்திட்டங்களை அமைத்தார்.

அதன்பின்னர் 1970 ஆம் ஆண்டிலேயே கொழும்பில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்காக அன்றைய அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுத்தது.

பீட்டர் கெனமன், மற்றும் ரணசிங்க பிரேமதாச பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருந்த காலப்பகுதியில் பல வீட்டுத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.

அதன்பின்னர் வந்த அரசாங்கங்களும் வீட்டுத்திட்டங்களை அமுல்படுத்தி வறிய மக்களுக்கு உதவி வந்ததாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

(Minister Patil provide political affairs pressure housing schemes)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :