கோடி கோடியாய் கொட்டிக்கிடக்கும் தங்கம்

0
1318
China India Border Dispute

China India Border Dispute

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத்துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது.இதில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அருணாசலபிரதேச எல்லையையொட்டி லூன்சே என்னும் பகுதியில் சீனா அரசு தங்கச் சுரங்கம் தோண்டி வருகிறது. இங்கு சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு தங்கம், வெள்ளி மற்றும் இதர விலையுயர்ந்த உலோக தாதுக்கள் பூமிக்குள் இருப்பதாக ஹாங்காங்கில் வெளிவரும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் அண்மையில் தகவல் வெளியிட்டது.

இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லூ காங் கூறுகையில், “சீனா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது தங்கச் சுரங்கம் தோண்டப்படும் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமானது. இந்த பகுதியை அனுபவிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது” என்றார்.