இணையத்தையே குழப்பியுள்ள ஒரு வார்த்தை!: உங்களுக்கு எப்படி கேட்கின்றது?

0
642
Yanny Laurel Confusion

இணையத்தில் அவ்வப்போது வெளியாகும் சில புதிர்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு ஆடையொன்றின் படம் இணையத்தில் பகிரப்பட்டது. அந்த ஆடையின் உண்மையான நிறம் என்னவென்பதே கேட்கப்பட்ட கேள்வி ஆக இருந்தது.

இதன்போது, ஒரு சாரார் குறித்த ஆடை வெள்ளை மற்றும் தங்க நிறமெனவும், ஒரு சாரார் நீலம் மற்றும் கறுப்பு நிறமெனவும் தெரிவித்திருந்தனர்.

உண்மையில் கறுப்பு மற்றும் நீல நிறமான குறித்த ஆடை, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்த நிறவேறுபாடுக்கான காரணம் நரம்பியல் மற்றும் மனித மூளை தொடர்பானதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது ஒரு வார்த்தை இணையத்தை கலக்கி வருகின்றது.

அந்த வார்த்தை, யானி என ஒரு சிலருக்கும், லோரல் என ஒரு சிலருக்கும் கேட்பதாக கூறப்படுகின்றது.

தற்போது தீயாக பரவி வரும் அந்த வார்த்தை உங்களுக்கு எப்படி கேட்கின்றது என நீங்கள் கூறுங்கள்.

மனிதனின் கேட்டல் சக்தியில் இருக்கும் வேற்பாடு, மனித மூளை வார்த்தைகளை எவ்வாறு உள்வாங்குகின்றது போன்ற காரணிகளே வார்த்தைகளின் வேறுபாட்டிற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது

Video Credit: The Guardian

மனிதனின் கேட்டல் சக்தியில் இருக்கும் வேற்பாடு, மனித மூளை வார்த்தைகளை எவ்வாறு உள்வாங்குகின்றது போன்ற காரணிகளே வார்த்தைகளின் வேறுபாட்டிற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது