நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!

0
712
Prime Minister mahathir announcement , malaysia tamil news, malaysia news, malaysia, mahathir

{ Prime Minister mahathir announcement }

மலேசியா: நாட்டின் கடன் தொகை ‘ஆபத்தான’ கட்டத்தை அதாவது ரிம.1 டிரில்லியனை எட்டி விட்டதாக பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆபத்தான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, முக்கிய நடவடிக்கைகள் கூடிய விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தாம் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில், நாட்டின் கடன் தொகை ரிம.300 பில்லியனாக இருந்ததை என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதனிடையில், பொதுத் துறையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும், நாட்டின் நலனுக்காக பாடுபட்ட ஊழியர்களை அரசாங்கம் புறக்கணிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறையின் கீழ் செயல்படும் பொதுத் துறை ஊழியர்களுடனான மாதாந்திர சந்திப்பு நிகழ்வின் போது, மகாதீர் அவ்வாறு கூறியுள்ளார்.

“நாட்டின் சட்டத்திட்டத்தை மதித்து, நாட்டை ‘சுத்தப்படுத்தி’ மாற்றத்திற்கு வழிவகுப்பதில் பொதுத் துறை ஊழியர்கள் ஈடுபட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் பொதுத் துறை ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Prime Minister mahathir announcement

<< RELATED MALAYSIA NEWS>>

*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை

*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!

*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..!

*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!

*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

*மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா?- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி

*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

<<Tamil News Groups Websites>>