Categories: MORETop Storyநெற்றிக்கண்

நினைவேந்தல் குளறுபடிகளில் சிதைக்கப்படும் ஆன்ம உணர்வு!

(Mullivaikkal Remembrance Day Issues Should Correct Next Year)

கடந்த 18 ஆம் திகதி இறுதி யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் ஒழுங்கமைப்பு ஆரம்பமான நாள் முதல் இதில் பங்கெடுக்கும் தரப்புகள் தொடர்பில் தொடர்ச்சியான சர்ச்சைகள் நிலவி வந்தமை தொடர்பில் பலரும் தமது வருத்தத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நிகழ்வை அனைவரும் ஒருமித்து அனுஷ்டிக்கும் வண்ணம் அதன் ஒருங்கமைப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கையில் எடுத்து கொண்ட விடயம் பெரும் வாத பிரதிவாதங்களை எழுப்பிவிட்டுள்ளது.

உண்மையில் இந்த நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்கள் தமது தலைமையில் நடத்தி முடித்துள்ளமை வரவேற்கதக்க விடயமே. காரணம் எமது விடுதலைப்போராட்டத்தின் ஆணிவேராக யாழ் பல்கலைக்கழகமே விளங்கி வந்தது.

அதுமட்டுமன்றி , எமது இனத்தின் வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் முக்கிய ஊடகமாக இந்த பல்கலைக்கழகமே அன்று தொடக்கம் விளங்கி வருகின்றது.

ஆனால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சரியான தகுதியுள்ளவர்கள் சில ஆலோசனைகளை வழங்கவேண்டியது அவசியமாகின்றது.

இம்முறை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் சில குளறுபடிகள் இடம்பெற்றிருந்தமை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவேண்டிய நிகழ்வு. இதில் முன்னெடுக்கப்படும் விடயங்கள் மிகவும் எளிமையாக இருத்தல் அவசியம்.

அடுத்த விடயம் , நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தரப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமை ஒரு விதத்தில் சரியான நடைமுறை என்றாலும் முன்னாள் போராளி துளசியின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக அவர் பொது வெளியில் அவமானப்படும் விதமாக அவரை ஓரம் கட்டிய விடயம் மிகவும் கண்டனத்துக்குரியது.

இவை போன்ற சில விடயங்கள் திருத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு அடுத்த வருடம் இடம்பெற கூடியதாக அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட அனைத்து தரப்புகளும் முன்வர வேண்டும். காரணம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எமது இனத்தின் அழிவுகளின் ஒட்டு மொத்த அடையாளம் அதை மங்கி போகாத உணர்வுடன் அனுஷ்டிக்கவேண்டியது எமது தலையாய கடமையாகும்.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு

Jey

Share
Published by
Jey
Tags: Mullivaikkal Remembrance Day Issues Should Correct Next Year

Recent Posts

தனுஷ் இயக்கும் படத்தில் 4 ஹீரோக்களுக்கு 2 ஹீரோயின்களா?

நடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்துக்கான பணியில் பிஸியாகி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோக்களாம். ஆம் சரத்குமார், நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா என…

45 mins ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

1 hour ago

பிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்!

பிரித்தானியாவில் தந்தை கையால் கொல்லப்பட்ட மகள் இறுதியாக அழகான சிரிப்புடன் பீட்சா சாப்பிட்ட மனதை உருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. daughter father Britain unaware death வில்லியம் பில்லிங்கன்…

1 hour ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

2 hours ago

அயல்நாட்டு காதலியுடன் கமிட்டான கீதா கோவிந்தம் விஜய் : வெகு சீக்கிரத்தில் திருமணம்

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இணைந்து நடித்த படம் அர்ஜுன் ரெட்டி. காலத்திற்கு தகுந்த காதல் படம் என்பதால் நல்ல ஹிட் கொடுத்தது…

2 hours ago

பிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மெது மெதுவாய் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களுக்கான டாஸ்க் மிகவும் பலமானதாக இருந்து வருகிறது. அத்தோடு ஐஸ்வர்யாவின் செய்ல்பாடுகளும் மக்களிடையே…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.