இடி மற்றும் மழையுடனான கால நிலை நீடிக்கும் – எச்சரிக்கின்றது கால நிலை அவதான நிலையம்

0
1064
heavy rain thunder people careful warning meteorology department

heavy rain thunder people careful warning meteorology department
நாட்டின் பல்அனைத்து பகுதிகளிலும் இடியுடனான மழை பெய்யக்கூடிய கால நிலை மேலும் சில தினங்களுக்கு நீடிபபதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை நாட்டின் ஊடாக நிலைகொண்டுள்ளதால் நிலவும் மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை நிலைமைகளில் அதிகரிப்பு ஏற்படலாம் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கைக்கு அமைய செற்படுமாறும் அந்த நிலையம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
heavy rain thunder people careful warning meteorology department

More Tamil News

Tamil News Group websites :