கர்நாடக தற்காலிக சபாநாயகர் போப்பையாவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

0
423
trial case election pope interim speaker Karnataka state assembly begins

trial case election pope interim speaker Karnataka state assembly begins

இந்திய கர்நாடக மாநில சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க. கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை தற்போது உயர்நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று பா.ஜ.க.வின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே. இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது.

இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது சபாநாயகரின் பங்கு இதில் முக்கியத்துவம் பெறுகிறது. பா.ஜ.க.வை சேர்ந்த கே.ஜி.போப்பையா தற்காலிக சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா இவரது தேர்விற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

முதலில் கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்ந்தெடுக்கப்பட இருந்தார்.

போப்பையா செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அவர் விதிமுறைகளை பின்பற்றி தெரிவு செய்யப்படவில்லை என்று இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக, போப்பையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

trial case election pope interim speaker Karnataka state assembly begins

More Tamil News

TAMIL NEWS GROUP WEBSITES :