சிரியாவின் இரசாயனத் தாக்குதல் உறுதியானது

0
610
Syria chemical attack firm Tamil news trending topic

Syria chemical attack firm Tamil news trending topic

வட சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உலக இரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த டூமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். குறித்த இந்தத் தாக்குதலுக்கு குளோரின் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.

இந்நிலையில், முன்னதாக மருத்துவ குழுக்களும் செயற்பாட்டாளர்களும், சிரிய அரசு ஹெலிகொப்டர் மூலமாக குளோரின் நிரப்பப்பட்ட குண்டுகள் வீசியதாக தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பில் விசாரணை செய்த ஐநாவின் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் கூட்டுப்பணி முடிவுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் சிரிய அரச படைகள் நரம்புகளை தாக்கும் சரின் மற்றும் குளோரின் ஆகியவற்றை பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது. டூமாவில் அரசுப்படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உறுதியாக கூறிவரும் நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நோயாளிகளைப் பரிசோதித்த போது குளோரின் வாயுவை கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

(Syria chemical attack firm Tamil news trending topic)

Related Articles