9 ஆண்டுகள் நிறைவு : இலங்கை அரசாங்கத்திடம் மன்னிப்பு சபை விடுத்துள்ள கோரிக்கை

0
651
Release lists forcibly disappeared Amnesty International

(Release lists forcibly disappeared Amnesty International)
போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலையும், அவர்கள் பற்றிய தகவலையும் வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம், அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

”சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு தாம் பாதுகாப்புச் சபைக்கு உத்தரவிடுவதாக கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவராக இலங்கை ஜனாதிபதியாகவே இருக்கிறார். அவரே முப்படைகளினதும் தளபதி.

இருந்த போதும், அவர் வாக்குறுதி அளித்து 11 மாதங்களாகியும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களின் படடியல் இன்னமும் வெளியிடப்படவில்லை என்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:Release lists forcibly disappeared Amnesty International,Release lists forcibly disappeared Amnesty International