காங்கிரஸ் தோல்விக்கு சித்தராமையாவே காரணம் – கே.பி.கோலிவாட் குற்றச்சாட்டு

0
461
accused Congress failing election wrong approach Siddaramaiah

accused Congress failing election wrong approach Siddaramaiah

இந்திய கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையாவின் தவறான அணுகுமுறையாலேயே தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததாக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் கே.பி.கோலிவாட் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கே.பி.கோலிவாட் செய்தியாளர்களிடம் கூறியதாவ‌து:

கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இல்லை. ம.ஜ.த.வில் இருந்து வந்ததால் ஆரம்பத்தில் இருந்தே பாரம்பரிய காங்கிரஸ் தலைவர்களை உரிய முறையில் மதிக்கவில்லை. இருப்பினும் கட்சி மேலிடம் அவருக்கு முதல்வர் பதவி கொடுத்தது.

அதனைப் பயன்படுத்தி கட்சியை வளர்க்காமல் தனது ஆதரவாளர்களை மட்டுமே வளர்த்தார். இதனால் எஸ்.எம்.கிருஷ்ணா, சீனிவாச பிரசாத் போன்ற‌ பாரம்பரிய காங்கிரஸார் இங்கிருந்து பா.ஜ.க.வுக்கு தாவினர்.

கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் என்னை தோற்கடிக்க முயற்சித்தார். அவரது முயற்சி பலிக்காமல் போனது. ஆனால், தற்போது நடந்த தேர்தலில் திட்டமிட்டு என்னை தோற்கடித்தார். நான் தோல்வி அடைந்ததற்கு

சித்தராமையாவே காரணம். காங்கிரஸின் தோல்விக்கும் அவரே காரணம். இந்த தேர்தலில் சித்தராமையா மூத்த காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, வீரப்ப மொய்லி ஆகியோருக்கு உரிய முன்னுரிமை வழங்கவில்லை.

சித்தராமையா தன்னை மட்டுமே பெரிய தலைவராக நினைத்துக் கொண்டார். அதற்கான பலனைத்தான் காங்கிரஸ் இப்போது அனுபவிக்கிறது.

சித்தராமையா தலைமையில் வருகிற மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால் நிச்சயம் தோல்வி அடையும். எனவே, சித்தராமையாவை தண்டிக்கும் விதமாக கட்சி மேலிடம் அவருக்கு எந்த பொறுப்பையும் வழங்கக் கூடாது. இது குறித்து ராகுல் காந்தியிடம் எடுத்துரைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

accused Congress failing election wrong approach Siddaramaiah

More Tamil News

Tamil News Group websites :