இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறினார் சரபோவா!

0
575
Italian open 2018 Maria Sharapovan news tamil

(Italian open 2018 Maria Sharapovan news tamil)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு ரஷ்ய வீராங்கனை மரியா சரபோவா தகுதிபெற்றுள்ளார்.

ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் சரபோவா அவுஸ்திரேலிய வீராங்கனை டரியா கவ்ரிலோவாவை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்ப செட்டிலிருந்து சிறப்பாக ஆடிய சரபோவா 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆரம்ப செட்டை 6-3 என கைப்பற்றிய சரபோவா, இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.

சரபோவா காலிறுதிப்போட்டியில் லட்வியாவைச் சேர்ந்த ஜெலீனா ஒஸ்டபென்கோவை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>