குட்கா போதைபொருள் முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

0
561
CBI probe Gudkai drug abuse case petition filed defamation

CBI probe Gudkai drug abuse case petition filed defamation

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருள் முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா போதை பொருள் முறைகேடு விவகாரத்தில் முறையான விசாரணைக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் சென்னை மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் அரசுத் தரப்பு, வருமான வரித்துறை தரப்பு, இலஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு, உணவு பாதுகாப்புத் துறை தரப்பு , தி.மு.க. தரப்பு என பல தரப்பினரும் வாதங்களை எடுத்து வைத்தனர்.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு, குட்கா போதை பொருள் முறைகேடு வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

இதை எதிர்த்து சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க எந்த தடையும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளதுடன், சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

CBI probe Gudkai drug abuse case petition filed defamation

More Tamil News

Tamil News Group websites :