ஒரே வேடத்தில் இரு ஆண்களை திருமணம் முடித்த பெண்; இலங்கையில் சம்பவம்

0
1496
one girl married two men

(one girl married two men)
பெண்ணொருவர் இரண்டு பெயர்களில் நடித்து, ஒரே பாதுகாப்பு முகாமில் சேவை செய்த இரண்டு நபர்களுடன் பல வருடங்களாக குடும்பம் நடத்தியமை தொடர்பிலான தகவல் மாவதகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மத்திய மாகாணத்தில் வசித்துவரும் பெண்ணொருவர், அவளின் உறவினரான மைத்துனர் ஒருவரை பல வருடங்களுக்கு முன்னர் சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்டார்.

ஒருநாள் தனது கணவனுடன் கண்டிக்கு சென்ற பொழுது, ஒரே பாதுகாப்பு முகாமில் சேவை புரியும் தனது கணவனின் நண்பன் ஒருவரை சந்தித்துள்ளார்.

குறித்த நபரிடம் இந்தப் பெண் தனக்கு தன்னைப் போலவே தங்கையொருவர் உண்டு என்றும் தாங்கள் இரட்டைப் பிள்ளைகள் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், தனது தங்கையுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்றால் இந்த தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள் என தனது தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்துள்ளார்.

குறித்த இருவரும் சில காலம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பின்னர் காதலித்து, தங்கையின் பெயரில் திருமணம் முடித்துள்ளனர்.

மணமுடித்த பின்னரும் குறித்த பெண், முதல் கணவன் மற்றும் இரண்டாவது கணவன் இருவரும் விடுமுறையில் வரும்பொழுது இவர்களின் இல்லத்தில் முறைப்படி வெவ்வேறாக குடும்பம் நடத்தியுள்ளார்.

இருவரும் ஒரே நேரத்தில் விடுமுறையில் வருவதை திறமையாக தவிர்த்துள்ளார். எனினும் இந்தப் பெண்ணை திருமணம் முடித்த ஆண்கள் இருவருக்கும் இவளின் மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை.

எனினும் குறித்த பெண்ணின் முதல் கணவனின் உறவினர்கள் இவளின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவளின் பயணங்களைக் கண்காணித்த போது, அவளின் இரட்டை வேட நாடகத்தை கண்டறிந்துள்ளனர்.

என்றாலும், ஏற்கனவே அவள் தனது முதல் கணவனின் வங்கி கணக்கில் இருந்து 25 இலட்சம் ரூபாவும், இரண்டாவது கணவனின் வங்கி கணக்கில் இருந்து 14 இலட்ச ரூபாவும் மோசடி செய்து பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; one girl married two men