குதிரை பேரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா…?

0
699
anybody know karnataka horse bargain

anybody know karnataka horse bargain

கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார், பல்வேறு சர்ச்சைகள், பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்,

இதனிடையே பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் வாஜுபாய் வாலா 15 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார், இந்நிலையில் குதிரை பேரம் என்ற வார்த்தையை தவறாமல் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்,

குதிரை பேரம் என்றால் என்ன?

அது எப்படி வந்தது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம் – அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றியது, காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 77 தொகுதிகளையும் தன்வசமாக்கின, மெஜாரிட்டிக்கு தேவையான 113 தொகுதிகளும் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை, இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தந்தது, ஆனால் ஆட்சியமைக்க தங்கள் தரப்பிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என கர்நாடகா முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்தார்,

அதேபோல காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒன்றாக ஆளுநரை சந்தித்து தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார், ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் பாஜக’விற்கு 104 இடங்கள் இருந்தன, அதே சமயம் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 115 இடங்களுடன் ஆளுநர் அழைப்பிற்கு காத்திருந்தது, ஆனால் ஆளுநர் அழைத்தது பாஜகவை,

இதனையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உச்சநீதிமன்றத்தை நாடியது, ஆனால் எடியூரப்பா ஆட்சியமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து,

இந்நிலையில் தற்போது கர்நாடகாவின் பாஜக பலம் 104 தொகுதிகள் மட்டுமே அனால் 15 நாட்களுக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து ஆகா வேண்டும், அப்படியானால் அவருக்கு எம்.எல்.ஏக்கள் பலம் 113 வேண்டும், இல்லையென்றால் அவர்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும்,

இந்த நேரத்தில் ஆட்சியை தக்க வைக்க பெரும்பான்மையை நிரூபிக்கும் பொருட்டு பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க விலைக்கு வாங்க முயற்சிக்கலாம், பதவி தருகிறோம், அந்தஸ்து தருகிறோம் என இத்தகைய ஆசை வார்தைகளை கூறுவதுதான் குதிரை பேரம் என சொல்லப்படுகிறது,

இத்தகைய குதிரை பேரம் என்ற வார்த்தை 1820’ஆம் ஆண்டிலிருந்தே புழக்கத்தில் இருந்து வருகிறது.

More Tamil News

Tamil News Group websites :