கோடை காலத்தில் அசத்தும் மாம்பழ லட்டு

0
619
tasty summer mango laddu

(tasty summer mango laddu )

ஒவ்வொரு காலத்திலும்,  ஒவ்வொரு பழங்கள் கிடைக்கும் காலமாக இருக்கும்.  ஆனால்,  இந்த வெயில் காலமானது மாம்பழத்திற்கான சீசனாக உள்ளது. மாம்பழம் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும்.

மாம்பழத்தை வைத்து பொதுவாக ஐஸ் கிரீம் மற்றும் மாம்பழ ஷேக் செய்வார்கள். ஆனால் , நீங்கள் மாம்பழ லட்டு சாப்பிட்டதுண்டா? இது தனி சுவை கொண்ட இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் மற்றும் மாம்பழ உள்ளதால் சுவை பிரமாதமாக இருக்கும்.

வாருங்கள் இப்போது நாம் மாம்பழ லட்டு செய்வதற்கு தேவையானப் பொருட்களைப் பற்றியும், செய்யும் முறை பற்றியும் விரிவாக பார்ப்போம்…

தேவையானப் பொருட்கள்

மாம்பழ கூழ் – 1/2 கப்

சுண்டக் காய்ச்சிய பால் – 1/2 கப்

தேங்காய் பவுடர் – 1 கப்

ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

நட்ஸ் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

செய்யும்முறை:-

  1. இந்த மாம்பழ லட்டை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது மிக சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.  அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

2. இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது மிக     சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து  அதில் தேங்காய் பவுடரை     போட்டு  பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக்     கூழை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

3. இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து     அனைத்தும் ஒன்று சேரும்படி கிளற வேண்டும். நல்ல பதத்தில் அதாவது சிறிது   கெட்டியாக லட்டு பிடிக்க சரியான பத நிலைக்கு வந்தவுடன் அடுப்பை   அணைத்துவிட வேண்டும்.

4.இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிது சிறிது உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். நெய் தடவிய  ஒரு தட்டில் சிறிது தேங்காய் பவுடரை தூவிக் கொள்ளுங்கள். வேணுமென்றால் விருப்பத்திற்கு ஏற்ப கலர் சேர்த்துகொள்ளலலாம், அடுத்ததாக தூவி வைத்திருக்கும் தேங்காய் பவுடர் மீது செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி…

இப்பொழுது இந்த சுவையான மாம்பழ லட்டை சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க பார்கலாம்.

tags:-tasty summer mango laddu
<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

தமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது