கட்டிப்பிடித்துக்கொண்டவர்கள் மீண்டும் முறைத்துக்கொண்டனர்!

0
651

North Korea cancels South Korea Talks

தென்கொரியாவுடனான உயர்மட்ட பேச்சுகளை வடகொரியா ரத்து செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பு குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

இரு கொரியாக்களுக்கும் இடையே இன்று நடைபெறவிருந்த சந்திப்பை, வடகொரியா ரத்துசெய்ததாக, தென்கொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகள் அதற்குக் காரணம் என வடகொரியாவின் அதிகாரத்துவச் செய்தி நிறுவனம் KCணா கூறியதாக, தென்கொரியா தெரிவித்தது.

அந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி, தூண்டுதல் நடவடிக்கை என வடகொரியா வருணித்தது. மேலும் இது படையெடுப்புக்கான முயற்சி என வடகொரியா தெரிவித்துள்ளது.

வேறு வழியின்றி வடகொரியா இருதரப்பு சந்திப்பை ரத்து செய்வதாகவும் அது குறிப்பிட்டது.

கொரிய தீபகற்பத்தை அணுசக்தியற்ற பகுதியாக்கும் உறுதி பற்றி கலந்துபேச, இரு கொரியாக்களும் சந்திக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.