காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு

0
526
59 Palestinians killed Gaza border Tamil news

(59 Palestinians killed Gaza border Tamil news)

இஸ்ரேல், பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

பாலஸ்தீன், கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது. கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார்.

அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இது உலக அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில், அறிவித்தபடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மகள் இவான்கா டிரம்ப், இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதின் 70-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். அவர்கள், டயர்களை சாலைகளில் கொளுத்திப்போட்டனர்.

அவர்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனர்கள் கல்வீச்சு நடத்தினர்.

போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் ஆளில்லா விமானங்கள் மூலம் இஸ்ரேல் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியது.இதன் காரணமாக காசா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

(59 Palestinians killed Gaza border Tamil news)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :