இத்தாலி ஓபன் முதல் சுற்றில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றி

0
554
italian open 2018 Sloane Stephens news Tamil

(italian open 2018 Sloane Stephens news Tamil)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருக்கின்றது.

இந்த போட்டித் தொடரில் மகளிர் ஒற்யைர் பிரிவுக்கான முதல் சுற்றுப்போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், செக்குடியரசின் பார்போரா ஸ்ரைகோவாவை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் ஸ்டீபன்ஸ் வெற்றிபெற்றார்.

முதல் செட்டில் சிறப்பாக ஆடிய ஸ்ரைகோவா டை பிரேக்கர் ஊடாக 7-6 (7-4) என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார். எனினும் அடுத்த இரண்டு செட்களிலும் அபாரமாக ஆடிய ஸ்டீபன்ஸ் 6-3 மற்றும் 6-1 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>