இத்தாலி ஓபன் முதல் சுற்றில் வென்றார் ஜொகோவிச்…

0
579
Italian Open 2018 Novak Djokovic

(Italian Open 2018 Novak Djokovic)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப்போட்டியில் சேர்பியாவின் முன்னணி வீரர் நொவெக் ஜொகோவிச் வெற்றிபெற்றுள்ளார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது.

இந்த போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜொகோவிச், உக்ரைனின் அலெக்ஸாண்டர் டொல்கோபோலோவை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதல் அபாரமாக ஆடிய ஜொகோவிச், 2-0 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய ஜொகோவிச், இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Tamil News Group websites>>